சிவகாசி அருகே இரு வெவ்வேறு இடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது. 125 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி காவல் சரகத்திக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கிராம பகுதியில் ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான போலீஸார் பல இடங்களில் ரோந்து பணி செய்தனர். அப்போது விஸ்வநத்தம் அரசு பள்ளி அருகே சந்தேகப்படி நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் பையில் மறைத்து வைத்திருந்த 50 கிராம் கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய போலீஸார் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் செல்வம் ஆகிய இருவருர் மீது ஸ்ரீவில்லிபுத்தார் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதை போல் விஸ்வநத்ததிலுள்ள மற்றொரு இடமான தனியார் மெட்ரிக் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.