கள்ளச்சாரயம் காய்ச்சிய 3 பேர் கைது.
சிவகாசி அருகே உள்ள பித்துலுப்பட்டியில் தோட்டத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சிய 3 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் மது விலக்கு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
விருதுநகர் மாவட்டம்.
சிவகாசி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பித்துலுப்பட்டியில் உள்ள சண்முககனி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மதுவிலக்கு டி. எஸ். பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்த போது, கள்ளச்சாரயம் காய்ச்சியது தெரியவந்தது. சாராயம் காய்ச்சிய சாத்தூர் பகுதியை சேர்ந்த தோட்ட காவலாளி தங்கம்(59), பொன்பாண்டி, நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்த போலீஸார், வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 லிட்டர் கள்ளச்சாராயம், ரூ. 500 பணம் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரம், அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் அணைக்கரைபட்டியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரை மது விலக்கு போலீஸார் தேடி வருகின்றனர்.