ஸ்ரீவி: QR கோட் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி துவக்க விழா..

82பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற வைத்தியநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து காணிக்கையை செலுத்தும் வசதியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சிவனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது பக்தர்கள் எளிதாக காணிக்கைகளை நேரடியாக கோவில் நிர்வாகத்தின் கணக்கிற்க்கு செலுத்துவதற்கான புதிய முயற்சியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏற்பாடு செய்து அவர்களின் மூலம் கியூ ஆர் ஸ்கேன் செய்து காணிக்கையை செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தினர். இந்த திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் வரவேற்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி