ஸ்ரீவி: நகராட்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் போராட்டம்..

58பார்த்தது
ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்.
விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் பல்வேறு இடங்களில் உள்ள குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும், இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், முன்னறிவிப்பு இன்றி 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தியது, சொத்து வரிக்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறையை தூய்மை படுத்தி பராமரிக்க வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுகாதார வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி