ஸ்ரீவி: தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு....

78பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வத்திராயிருப்பில் தொடர் மழையால் அணைகளுக்கு
நீர்வரத்து அதிகரித்து
வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பிளவக்கல்
பெரியாறு அணை மற்றும் கோவிலாறு அணைகள் அமைந்துள்ளன. தற்போது தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழையினால் பிளவக்கல்
பெரியாறு அணையின்
நீர்மட்டம் 35 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் கடந்த மாதம் முதல் வத்திராயிருப்பு மேற்குதொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளுக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது.
பிளவக்கல் பெரியாறு அணையில் 24 அடியாக இருந்த
நீர்மட்டம் தொடர் மழையால் தற்போது 35 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல 42 அடி உயரமுள்ள கோவிலாறு அணையில் தற்போது 30 அடி தண்ணீர் உயர்ந்து உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெரியாறு அணை நிரம்பும் நிலையை எட்டும் என
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் வத்திராயிருப்பு பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி