சிவகாசி - Sivakasi

சிவகாசி: இடிந்து விழும் அபாயத்தில் ஊராட்சி அலுவலகம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நமஸ்கரித்தான்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இயங்கி வருகின்றது. இந்த கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உள்ளன. மேலும், மழை காலத்தில் கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து ஆவணங்கள் சேதம் அடைந்து வருகின்றன. ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரும் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. ஆகவே, ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், சேதமடைந்துள்ள இந்த கட்டிடத்தில் தான் தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகின்றது. ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக அலுவலகம் வேறு கட்டிடத்தில் செயல்படவும், சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டவும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்