சிவகாசி: விடுதியில் கல்லூரி மாணவிகள் போராட்டம்....

59பார்த்தது
சிவகாசியில் செயல்பட்டு வரும் அரசு மாணவியர் விடுதியில் தங்குவதற்கு முறையாக விண்ணப்பித்தும் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக மாணவிகள் குற்றச்சாட்டு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் அதிமுக ஆட்சி காலத்தில் புதிதாக அரசு கலைக்கல்லூரி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பல மாவட்Lத்தில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி இருந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு தங்கும் விடுதிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த விடுதியில் மாணவிகள் எண்ணிக்கை அதிகம் இருப்பதன் காரணமாக மாணவர்கள் விடுதியில் மாணவிகள் தங்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மாதம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியரின் நேரடி விசாரணையில் மாணவிகள், மாணவர் விடுதியை பயன்படுத்தலாம் என உத்தரவிடப்பட்டது. இந்த
நிலையில் விடுதியில் தங்குவதற்காக மாணவிகள் தொடர்ந்து இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால் மாணவிகள் விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதாகவும் முறையாக விண்ணப்பம் அளித்தும் மாணவிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் இதனால் நெடுதூரத்தில் இருந்து வரும் மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி