சிவகாசியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பிஜேபிக்கு தமிழகத்தில் ஆளை தேடித்தான் பிடிக்க வேண்டும்! -முன்னாள் அமைச்சர்
கே. டி. இராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேச்சு!!
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. டி. இராஜேந்திரபாவாஜி தலைமையில் நேற்று இரவு நடைப்பெற்றன. பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர்
கே. டி. இராஜேந்திரபாலாஜி, அதிமுகவுக்கு வயது 53. திமுகவுக்கு வயது 75. காங்கிரசுக்கு வயது100. பிஜேபி பற்றி பேசவே வேண்டாம் அதுக்கு ஆளத் தேடி தான் பிடிக்க வேண்டும். அதிமுகவுக்கு எதிரி திமுக தான் வருகின்ற தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்குகளை அள்ளித் தாருங்கள் ஏமாற்று பித்தலாட்ட வேலை செய்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் கட்சி திமுக. வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியா? ஸ்டாலினா? என்றால் அதிமுக தான் ஜெயிக்கும். வரும் தேர்தலில் ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு அனுப்புங்கள். எடப்பாடி பழனிச்சாமியை கோட்டைக்கு அனுப்புங்கள், அதிமுக தமிழ் நாட்டை ஆளட்டும், தமிழக மக்கள் வாழட்டும், திமுக கட்சியை தடம் இல்லாமல் ஆக்க வேண்டும் என்றார். மேலும் கூட்டத்திற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், மற்றும் அதிமுக பல்வேறு அணியை சேர்ந்த ஆண், பெண் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.