சிவகாசியில் பட்டாசுகள் வாங்குவதற்காக குவிந்த, வெளியூர் பட்டாசு பிரியர்கள்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. சிவகாசி, திருத்தங்கல் பகுதிகள், சாத்தூர், விருதுநகர் சாலை, சங்கரன்கோவில் சாலைகளில் அதிகளவிலான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை கடைகளும் ஏராளமாக உள்ளது. இதனால் சிவகாசியில் பட்டாசுகளின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பட்டாசு பிரியர்கள் குவிந்து வருகின்றனர். பட்டாசு விற்பனை கடைகளில் அனைத்து விதமான பட்டாசு ரகங்கள், மத்தாப்பு வகைகள், நவீன ரக வெடிகள், வாண வெடிகள் என சுமார் 500க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு பிரியர்களை கவரும் வகையில் 50 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதால், தங்களுக்கு பிடித்தமான பட்டாசு ரகங்களை நேரில் பார்வையிட்டு ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் பட்டாசு கடைகளில் குவிந்து, தங்களுக்கு தேவையான பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் சிவகாசி பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.