சிவகாசி: பள்ளிக்கு அபராதம் விதித்த மாநகராட்சி....

65பார்த்தது
சிவகாசியில் டெங்கு கொசு உற்பத்தி. தனியார் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்த மாநகராட்சி நிர்வாகம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத தனியார் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: -சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 40-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள வீடுகள், நிறுவனங்கள், பள்ளி ஆகியவற்றில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 40-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பெண்கள் பள்ளியில் டெங்கு பரவுவதற்கு ஆதாரங்களான கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அந்த தனியார் பள்ளிக்கு பொது சுகாதார சட்டத்தின் கீழ் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. பின்னர் அந்த பெண்கள் பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளியின் உள்ள தண்ணீர் தொட்டிகளை அவ்வபோது சுத்தம் செய்து கொசுப்புழு உற்பத்தியாகத வண்ணம் பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி