மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரின் கணவன் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். முன்னதாக அப்பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் பாலியல் பலாத்காரத்தை வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.