சிவகாசி அருகே சாமிபுரம் காலனியில் வேல்முருகன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு அருகே தகர செட் அமைத்து சட்ட
விரோதமாக பட்டாசு பண்டல்கள் மற்றும் பட்டாசு தயார் செய்வது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போலீஸார் ஆய்வு நடத்தினர். ஆய்வில் தகர செட்டில் சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் வேல்முருகன் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.