ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ பேட் 3 ப்ரோ எனும் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 16ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் சிப்செட், 9510mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டேப்லெட், விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும். இந்த ஒப்போ பேட் 3 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 3299 yuan (இந்திய மதிப்பில் ரூ.38,365)ஆக உள்ளது. வரும் அக்டோபர் 30ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது.