விருதுநகர் மாவட்டம்,
கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை சிறப்பு தீபாவளி இரயில். தென்னக இரயில்வே அறிவிப்பு. வரும் அக். 26 தேதி முதல் இயக்கப்படுகிறது. வழி தடங்கள் கரூர், திண்டுக்கல்,
மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, வழியாக கொல்லம் செல்கிறது. மீண்டும் மறுமார்க்கமாக வரும் அக். 27ஆம் தேதி கொல்லத்திலிருந்து புறப்பட்டு ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹுப்ளிலிருந்து கொல்லத்திற்கு தீபாவளி சிறப்பு இரயில் முதன்முறையாக மூன்று மாநிலங்களுக்கு ஒரே ரயிலில் நேரடி செல்லும் வாய்ப்பு.
தீபாவளிப் பண்டிகைக்கு
முன்பதிவு இன்று (24. 10. 24) காலை 08. 00 மணிக்கு துவகியது. ஹுப்ளி-கொல்லம்-ஹுப்ளி தீபாவளி சிறப்பு இரயில்(07313/07314) வழி: பெங்களூரு, மதுரை விருதுநகர் சிவகாசி, ராஜபாளையம், செங்கோட்டை வழியாகவும், மறுமார்கமாக கொல்லம்-
ஹுப்ளி(07314) அக். 27 ஞாயிறு கிழமை இரவு 10. 30 மணியளவில் புறப்படுகிறது.
முழு வழித்தடங்கள்
ஹவேரி, ராணிபென்னூர், தாவனகரே, பிரூர், ஆர்ஷிகரே, தும்கூர், பெங்களூர் டெர்மினல் (SMVB), கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், கொட்டாரக்கரை,
குந்தாரா ஆகிய இடங்களில் இருமார்க்கத்திலும் நின்று செல்லும் இரயில்வே அறிவித்துள்ளது.