சிவகாசியில் ஒரே ஓவியத்தில் முதல்வர், துணை முதல்வரின் முகங்களை வரைந்து துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதியை வாழ்த்திய பள்ளி மாணவன்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள அதிவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யனார்- ஜெயலட்சுமி தம்பதியரின் மகன் சரண்சந்ரேஷ் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயது முதல் ஓவியத்தில் சிறந்து விளங்கும் சரண் சந்ரேஷ்.
அண்மையில் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இருவரது முகங்களின் வடிவமைப்புகளையும் தனது கரங்களால் காகிதத்தின் ஒரு பக்கத்தில் ஒரே வண்ண ஓவியமாக தீட்டி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளார்.