சிவகாசி: சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கிய 3 பேர் கைது...

50பார்த்தது
சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கிய பெண் உள்பட 3 பேர் கைது. ரூ30, 000/- மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்திலுள்ள செந்தில்குமார் பட்டாசு ஆலை அருகே தகர செட் அமைத்து பலதரப்பட்ட பட்டாசுகள் பதுக்கி இருப்பதாக திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 30 பெட்டிகளில் பட்டாசுகள் இருப்பு இருந்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தன. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த காளிராஜ், முத்துகுமாரி, மற்றும் விளாம்பட்டியை சேர்ந்த மாயகண்ணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து செய்திருப்பது தெரிய வந்தன. மேற்படி பட்டாசுகளை பறிமுதல் செய்த திருத்தங்கல் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த பட்டாசுகளின் மதிப்பு சுமார் 30, 000/- இருக்குமென தெரிகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி