விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து மாரனேரி செல்லும் சாலையிலுள்ள கட்டளைப்பட்டியில் மீராகுசேன் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக மற்றொரு இடத்தில் இரு கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக பட்டாசு பண்டல்கள் பதுக்கி இருப்பதாக மாரனேரி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேலும் தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசு பண்டல்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் கட்டிடத்திலிருந்த சுமார் ரூ 3, 40, 000/- மதிப்பு உள்ள 110 பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்த போலீஸார் கட்டிடங்களுக்கு சீல் வைத்து முத்துகிருஷ்ணன் மீது மாரனேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.