தேனி மாவட்டத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அப்பா முதலமைச்சர், பின்னர் மகன் முதலமைச்சர், அவரது மகன் துணை முதலமைச்சர். இதுதான் திமுகவில் நடந்த மாற்றம். இன்று எங்கு பார்தாலும் கலைஞர் பெயர் வைக்கிறீர்கள். ரூ.48 கோடிக்கு கார் ரேஸ் வைக்கிறீர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்கள்?” என கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.