மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும்படியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி வருகிறது. இத்திட்டம் குறித்து பேசிய மத்திய அமைச்சர்கிரண் ரிஜிஜு, வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு திட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் என நம்புகிறேன் என்றார்.