6000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது

77பார்த்தது
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட 2800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர், சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டன. இக்கற்கள் நுண் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர்
பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் "இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி