சாத்துார் அருகே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது. செல்போன் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் வட்டம், ஏழாயிரம்பண்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுசூரங்குடியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஆனந்தன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னாள் தாயில்பட்டி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வேலை செய்து விட்டு வெம்பக்கோட்டை வழியாக தனது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த மூன்று மர்ம நபர்கள் ஆனந்தனை தாக்கி கிழே தள்ளி விட்டு செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இந்நிலையில் காயமடைந்த அவரை அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் ஆனந்தன் புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடியதில்
கோவில்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி (19), அபிமன்யு (20),
செல்வபாரதி (18) ஆகிய கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாங்கள் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் அவர்களிடமிருந்து செல்போன், ரொக்கப் பணத்தை கைப்பற்றி அவர்கள் மீதி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்த பொருட்களை உரியவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.