சாத்தூர் அருகே மயங்கி விழுந்த சிறுவன் சாவு. போலீஸ் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் காவல் சரகத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே உள்ள வாகைகுளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சரவணன் (வயது 9). இவர் நடந்து செல்லும் போது திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். உடனே அவனை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் சிகிச்சை அளித்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த சிறுவன் சிகிச்சை பலன் இல்லாமல் உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்