சாத்தூர் அருகே உள்ள இலங்கை மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த இலங்கை அகதி கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் வட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கண்டியாபுரம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் நம்பர் சீட்டுகள் விற்பனை செய்வதாக ஆலங்குளம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் அகதி முகாமை சேர்ந்த தயாபரன் என்பவர் தனது வீட்டில் வைத்து செல்போன் மூலம் நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து செல்போன் மற்றும் பேப்பரில் எழுதிய நம்பர் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.