ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் அடிவார ஆற்றில் வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள
சாஸ்தா கோயில் வனப்பகுதியில் திடீர் கன மழையால் ஆறு மற்றும் அருவிகளில் வெள்ள பெருக்கு. மேலும் இராஜபாளையம், சேத்துார், சிவகிரி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் போன்ற ஊர்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர். கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் திடீர், திடீர் என்று மழை பெய்து வருகிறது.
இதனால் ஆறு மற்றும் அருவி, ஓடையில் வெள்ள பெருக்கு ஏற்படுவதால் சுற்றுலா பயணிகள் தவிர்க்குமாறும், குளிக்கவும் தடை விதித்து உள்ளது வனத்துறையினர். மேலும் இந்த அறிவிப்பை தெரியாமல் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்லுகின்றனர்.