விருதுநகர்: மனவேதனையில் பள்ளி மாணவன் தற்கொலை
இராஜபாளையம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்வரி மகன் அஜய்ராம் (வயது 17). இவர் அதே பகுதியில் பிளஸ்-2 படித்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழ் பயிற்சி கையேடு வாங்கித் தரும்படி தனது தாய் வெங்கடேஷ்வரியிடம் கேட்டதாகவும், அவர் பின்னர் வாங்கித் தருகிறேன் என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அஜய்ராம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்துத் தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.