சூழல் மாசை குறைக்கும் வகையில் ஆட்டோ, கார்கள் வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இருந்து CNG கேஸுக்கு மாறி வருகின்றன. இந்நிலையில், விற்பனையாளர்களுக்கு CNG ஒதுக்கீடு 20% வரை குறைந்ததால், அவர்களுக்கான லாபமும் குறைந்துள்ளது. இதை ஈடுகட்ட CNG விலை கிலோவுக்கு ரூ.5.50 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தற்போது 1 kg CNG ரூ.90.50க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு மேலும் சுமையாக மாறும்.