

இராஜ: இஸ்லாமியர்கள் மீது பற்றாக எடப்பாடியார் உள்ளார்; KTR பேச்சு
ராஜபாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பின்னர் பேசியதாவது விஸ்வகர்மா சமூகமான எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன் எனவும், அவர்கள் என்னை அப்பு என அழைப்பார்கள் எனவும், இஸ்லாமியர்கள் பிரதிபலன் பார்க்காமல் திமுகவுக்கு வாக்களித்தார்கள். திமுக இஸ்லாமியர்களுக்கு ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. இஸ்லாமியர்களை திமுக வாக்களிக்கும் இயந்திரமாக பயன்படுத்தியது. இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு காவல்துறையை அனுப்பி சோதனை செய்த வரலாறு திமுக ஆட்சியில் உண்டு. எஸ்.டி.பி.ஐ கட்சியில் வீரமிக்க இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆகவே இந்த கட்சியை முடக்க திமுக முயற்சி செய்கிறது. இஸ்லாமியர்கள் மீது பற்றுகொண்டவராக எடப்பாடியார் உள்ளார் என்றார்.