இராஜபாளையம்: ஆற்றில் வெள்ள பெருக்கு. மீட்கப்பட்ட 9 பேர்...

53பார்த்தது
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்திற்கு வனத்துறை உதவியோடு சென்ற 9 பேரை மீட்ட தீயணைப்பு துறையினர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அய்யனார் கோவில் மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர் வரத்து கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னாள் துரைச்சாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கரை தாண்டி கோவிலுக்கு சென்று நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயனைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தடை விதித்திருந்த நிலையில் வனத்துறை உடையணிந்த ஒரு சிலர் பிரதிபலனை எதிர்பார்த்து சொகுசு காரில் வந்த சிலரை தடை செய்யப்பட்ட இடத்திற்கு அனுமதி அளித்தனர். இதன் காரணமாக அப்பகுதிக்கு சென்ற நபர்கள் ஓடையில் குளித்து வந்த நிலையில் வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டன. இதனால் அக்கரையில் நின்ற 9 பேரும் தவித்து வந்த நிலையில் செய்தியாளர்களின் உதவியோடு வருவாய் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒன்பது பேரும் பத்திரமாக தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி