இராஜபாளையம் அருகே பெட்டி கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட முறம்பிலுள்ள பெட்டி கடையில் தமிழ அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததன மேற்படி தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் தென்காசி மாவட்டம் சேர்ந்த 73 வயதுடைய முதியவர் புலேந்திரன் என்பவரது பெட்டி கடையில் மறைத்து வைத்து இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ 600/-யை கைப்பற்றி போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.