சிவன் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழா*

60பார்த்தது
*அருப்புக்கோட்டை அருகே கிராமத்து சிவன் கோவிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழா*

*அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வரன், ஸ்ரீ கருப்பண சுவாமி திருக்கோவில் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ ஈஸ்வரன் சுவாமிக்கு அன்னாபிஷேகம் சிறப்பு அலங்காரம் சிறப்பு தீபாராதனை*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வரன் கருப்பண சுவாமி திருக்கோவில் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ ஈஸ்வரன் சுவாமிக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து காய்கறிகள் மலர் மாலைகள் சாற்றி சிறப்பு அலங்காரம் செய்து பரிவார தெய்வங்களுக்கும் பொங்கல் பழங்கள் அன்னம் படையலிட்டு நெய்வேத்தியம் காண்பிக்கப்பட்டு பஞ்சமுக தீபாரதனையுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி