இராஜபாளையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் போதை பொருளான கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் காவல் எல்லைக்குட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் உள்ள பள்ளி முன்பாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார் ஆய்வாளர் மூவேந்தன் தலைமையில் போலீஸார் சோதனை செய்தனர். சோதனையில் அதே பகுதியை சேர்ந்த முத்து அய்யனார் என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் 3200 ஐ கைப்பற்றிய போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.