இராஜபாளையத்தில் உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகளால் விழி பிதுங்கும் வனத்துறையினர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் வனத்துறையினரின் உத்தரவை மீறி வனப்பகுதி ஆறுகளில் விபரீதம் தெரியாமல் குளிப்பதற்காக குவியும் சுற்றலா பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வனத்துறையினர் ஆளாகி உள்ளனர். மேலும் தொடர் மழையால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து பாயும் வெள்ள நீரை ஆற்றில் செல்வதை கண்டுகளித்து குளித்து மகிழ சிவகாசி, விருதுநகர், சேத்துார் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் ராஜபாளையம் அய்யனார் கோவில், அணைத்தலை ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியில் சுற்றலா பயணிகள் கடந்த சில நாட்களாக குவிந்து வருகின்றனர். ஆனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் மற்றும் தொடர்மழையால் வனத்துறையினர் ஆற்றில் குளிக்க தடை விதித்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் தடையை மீறி குளிக்க முற்பட்டு வருவதால் தடுப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சுற்றுலா பயணிகள். வனத்துறையினர் கூறுகையில், சில நாட்களுக்கு முன் ராக்காச்சியம்மன், அய்யனார் கோயில் பகுதிகளில் தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் போராட வேண்டி இருக்கிறது, அதிகாரிகளின் உத்தரவை தான் செயல்படுத்துகிறோம் என்பது சுற்றுலா பயணிகளுக்கு
புரிவதில்லை என கூறுகின்றனர்.