இராஜபாளையம் அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை. உடலை கைப்பற்றி போலீஸார் விசரணை.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்வரி மகன் அஜய்ராம் (வயது 17). இவர் அதே பகுதியால் பிளஸ்-2 படித்து
வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழ் பயிற்சி கையேடு வாங்கி தரும் படி தனது தாய் வெங்கடேஷ்வரியிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்
பின்னர் வாங்கி தருகிறேன் என கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அஜய்ராம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.