திமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது

69பார்த்தது
*அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பாக முகவர்கள் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ தலைமையில் நடைபெற்றது*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அருப்புக்கோட்டை திமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் அங்க திமுக பாக முகவர்களுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் திமுக நிர்வாகிகள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொது மக்களிடம் திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூற வேண்டும் எனவும், குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் திட்டம் போன்ற திமுக அரசின் நல்ல திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கி வாக்குகள் சேகரிக்க என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ திமுக பாக முகவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி