இராசபாளையம் - Rajapalayam

இராஜ: போலீசாரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது....

இராஜபாளைம் போலிசாரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய தலைமை காவலர்கள் கருப்பசாமி, ராம்குமார் இருவரும் ஒரு புகார் தொடர்பாக விசாரணை செய்வதற்கு கீழ் ஆவரம்பட்டி பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு போதையில் நின்றிருந்த சிலர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீசாரின் லத்தியை பறித்து காவலர்களை தாக்கினர். பின்னர் அங்கிருந்து காயங்களோடு தப்பியவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சேர்ந்துள்ளனர். இதுகுறித்து காவலர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அசோக்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை வேட்டையாடி இதுவரை 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரான தர்மலிங்கம் (40) என்பவரை கைது செய்தனர். அவரை மருத்துவ பரிசோதனைக்காக இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து செல்லும்போது தென்காசி ரோட்டில் தர்மலிங்கம் திடீரென பைக்கிலிருந்து குதித்து தப்பிச் சென்றார். அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் தர்மலிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


விருதுநகர்