அருப்புக்கோட்டை - Aruppukkottai

வழக்கறிஞரை தாக்கிய விவகாரம்; திமுக பிரமுகர் அதிரடி கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (38). வழக்கறிஞராக இருந்து வருகிறார். ‌ இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பாஸ்கரன் தபால் நிலையம் அருகே நேதாஜி சாலையில் காரில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் பாஸ்கரன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் பாஸ்கரன் அணிந்திருந்த 10 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக கவுன்சிலர் மணி முருகன் தூண்டுதலின் பேரில் குண்டு பாண்டி, அன்பு கணேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேர் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக பாஸ்கரன் தரப்பு அளித்த புகார் அடிப்படையில் நகர் போலீசார் 5 பிரிவுகளின்‌ கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விக்னேஷ் என்பவரை கைது செய்த நிலையில் தற்போது சொக்கலிங்கபுரத்தில் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் மணி முருகனை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

வீடியோஸ்


விருதுநகர்
Sep 20, 2024, 09:09 IST/சிவகாசி
சிவகாசி

சிவகாசி: மாதாந்திர அதிவேக ரயில் சோதனை ஒட்டம் - இரயில்வே

Sep 20, 2024, 09:09 IST
விருதுநகர் மாவட்டம், வருகின்ற 25. 09. 2024 அன்று காலை 09: 30 மணியளவில் OMS ஆய்வு வண்டி‌ மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மானாமதுரை, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம் வழியாக தென்காசி ரயில் நிலையம் வரை அதிவேக மாதாந்திர சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதில் மானாமதுரை-அருப்புக்கோட்டை- விருதுநகர் வழியாக 121கி. மீ அதிவேக சோதனை ஓட்டம் முதல்முறையாக நடைபெறயிருக்கிறது அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், ஆகிய பகுதிகளில் தண்டவாளம் அருகாமையில் உள்ளவர்கள் 25. 09. 2024‌ காலை 9 மணி முதல் கவனமாக இருக்கவும் இருப்பு பாதை யாரும் கடக்க வேண்டாம். மேலும் இது சோதனை ரயில் என்பதால் சற்று முன்பின் தாமதமாகலாம் எனவே அன்று முழுவதும் சற்று கவனத்துடன் இருக்கவும் என பொதுமக்களுக்க இரயில்வே நிர்வாகம் அறிவித்தப்பட்டு உள்ளது.