அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

57பார்த்தது
*அருப்புக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பஜாரில் உள்ள அண்ணாவின் திருஉருவ சிலைக்கு வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பஜாரில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக பேரறிஞர் அண்ணா சிலை அமைந்துள்ள வளாகத்தில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திமுக கட்சி கொடி ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து அண்ணா பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ இனிப்புகள் வழங்கினார். ‌ இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர திமுக நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி