மீண்டும் மஞ்சள் பை எழுத்து வடிவத்தில் நின்று விழிப்புணர்வு

83பார்த்தது
* "மீண்டும் மஞ்சள் பை" என்ற எழுத்து வடிவத்தில் நின்று கல்லூரி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு*

*அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியர்கள் "மீண்டும் மஞ்சள் பை" என்ற எழுத்து வடிவத்தில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து, அனைவரும் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் உமாராணி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மைதானத்தில் மாணவ மாணவியர்கள் தங்கள் கைகளில் மஞ்சள் பை ஏந்தியவாறு "மீண்டும் மஞ்சள் பை" என்ற எழுத்து வடிவத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அனைவரும் மீண்டும் மஞ்சள் பையை பயன்படுத்துவோம் என்பதை உணர்த்தும் வகையில்,
மாணவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் பையை கையில் ஏந்தி பிடித்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. ‌ இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி