இந்தியாவில், புதிய ரூ.100, ரூ.200 நோட்டுகளை விரைவில் வெளியிட இருப்பதாக நேற்று (மார்ச் 11) RBI தெரிவித்தது. இந்த புதிய நோட்டுகள் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், புழக்கத்தில் உள்ள பழைய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் வழக்கம்போல் செல்லுபடியாகும் எனவும் அறிவித்துள்ளது.