விக்கிரவாண்டி அருகே பட்டாசு குடோனுக்கு சீல் வைப்பது
விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி அடுத்த நேமூர் அருகே நந்திவாடி எல்லை பகுதியில் நேற்று(அக் 30)ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குடோனில் நேமூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அனுமதியின்றி பட்டாசுகளை வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர் நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முன்னிலையில் அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.