வேடசந்தூர் - Vedasandur

குஜிலியம்பாறை: காய்ச்சலுக்கு இருவா் பலி

குஜிலியம்பாறை: காய்ச்சலுக்கு இருவா் பலி

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த புதுகாலக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி (61). கடந்த 3 நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (டிச. 10) அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரியை பரிசோதித்தபோது, உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் அவர் உயிரிழந்தார். இதேபோல், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்புக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்தபோது, அவருக்கும் உண்ணிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதிபடுத்தப்பட்டது. உண்ணிக்காய்ச்சல் பாதிப்புக்கு இருவர் உயிரிழந்ததையடுத்து, கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా