திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த ஒட்டநாகம் பட்டி செல்லும் சாலையில் சாலையோரத்தில் கெட்டுப்போன பிரட் மற்றும் பன்னு பாக்கெட்டுகள் கொட்டி குவிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாகச் செல்லும் சிறுவர்களோ கால்நடைகளோ இதை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கெட்டுப்போன இது போன்ற தின்பண்டங்களை சாலையோரத்தில் கொட்டி செல்லும் மர்ம நபர்களை கண்டுபிடித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், வேடசந்தூர் போலீசாரும் நடவடிக்கை எடுப்பார்களா.
என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.