தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக தமிழக அரசு பால் கொழுமுதல் விலையை 10 ரூபாய் உயர்த்த வேண்டும், மானிய விலையில் கலப்பு தீவனம் வழங்க வேண்டும், பால் கொள்முதல் செய்யும் இடங்களிலே அதற்கான தர நிர்ணயமும் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குஜிலியம்பாறை தாலுகா கருங்கல் கிராமம் ஆனைப்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எல். தங்கவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராஜரத்தினம் பேசினார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜெயபால் பேசினார். இறுதியாக பல்வேறு கோரிக்கைகளை விளக்கி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் காசிமாயன் பேசினார். நிகழ்வில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டார்கள்.