வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் குடகனாறு நீர்த்தேக்கம் உள்ளது. 27 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 15 ஆண்டுகளுக்கு பிறகு 26 அடியை எட்டியது. அணைக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அதன் காரணமாக அணையின் ஐந்தாவது ஷட்டர் வழியாக குடகனாற்றில் எம்எல்ஏ காந்திராஜன் 156 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேறுமாறு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட பயிற்சி துணை ஆட்சியர் ராஜேஸ்வரிசுவி, குடகனாறு அணை உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரன், வேடசந்தூர் வட்டாட்சியர் சுல்தான், வேடசந்தூர் திமுக பேரூர் செயலாளர் கார்த்திகேயன், வேடசந்தூர் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கவிதாமுருகன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதிமாரிமுத்து, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மருதபிள்ளை, பாலப்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கௌசல்யாமுத்துகிருஷ்ணன், வி. புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி, குடனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ராமசாமி, வேடசந்தூர் வட்டார விவசாயிகள் சங்க செயலாளர் செல்வம், புதுரோடு பூவரசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.