வேடசந்தூர்: குடகனாறு ஆற்றில் தொழிற்சாலைகளின் கழிவுநீர்

57பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு ஆற்றில் தண்ணீர் வந்து வேடசந்தூர் வழியாக அழகாபுரியில் உள்ள 27 அடி கொள்ளளவு கொண்ட தடுப்பணையில் தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் 9000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றது. ஆற்றில் தண்ணீர் வராத காலத்தில் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படாமல் இருக்கும் போது மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வரும் பொழுது தங்களது தொழிற்சாலைகளின் கழிவுகளை மழை தண்ணீரோடு சேர்த்து திறந்து விடும் தொழிற்சாலைகள் உருவானதால் ஆற்றுநீர் மாசுபட்டு உள்ளது. இதனால் ஆற்று நீரை மக்கள் குடிக்க முடியாமலும் கால்நடைகள் குடித்தால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் ஆற்று நீரில் ஆனந்தமாக குளித்தால் அரிப்பு ஏற்படுவதும் உருவாகி உள்ளது. குடகனாறு ஆற்றில் வரும் தண்ணீரில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதால் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன் பட்டி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பிச்செல்லும் பொழுது நுரை பொங்குகிறது. மாவட்ட நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் செயல்பட்டு ஆற்றில் கலக்கப்படும் தண்ணீரை சுத்தமானதாக செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடகனாறு பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி