மதுரை: அழகர்மலை அருகே அரிட்டாப்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிச., 13) நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை தடுத்துநிறுத்த வலியுறுத்தி, மேலூர் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் இணைந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.