வேடசந்தூர்: புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா

57பார்த்தது
வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தூர், மோர்பட்டி, கொம்பேறிபட்டி, பிலாத்து, தென்னம்பட்டி, பி. கொசவபட்டி ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள், பழைய சித்துவார்பட்டியில் நியாய விலைக்கடை, அய்யலூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாக்களில் வேடசந்தூர் எம். எல். ஏ காந்திராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அய்யலூரில் 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, 5 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பாம்பு கடித்து உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி 1 லட்ச ரூபாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை எம். எல். ஏ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி. மு. க ஒன்றிய செயலாளர்கள் பாண்டி(கிழக்கு), சுப்பையன்(மேற்கு), நகர செயலாளர்கள் கணேசன்(வடமதுரை), கருப்பன்(அய்யலூர்), வேடசந்தூர் தாசில்தார் சுல்தான், வடமதுரை ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், அய்யலூர் வருவாய் ஆய்வாளர் ரமீஜாபானு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கௌரி மஞ்சுளாதேவி கணேசன்(புத்தூர்), ராஜரத்தினம்(கொம்பேறிபட்டி), பத்மா வேல்முருகன்(பிலாத்து), சிவசக்தி(மோர்பட்டி),
கோமதி பாலசுப்பிரமணியன்(தென்னம்பட்டி), நாராயணன்(பி. கொசவபட்டி), சந்திரா சாமுவேல்(சித்துவார்பட்டி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி