தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு

67பார்த்தது
தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஒத்திவைப்பு
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால், நாளை (டிச., 14) நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு மாணவர்களின் நலன் கருதி தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. மற்றொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி