திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கணேசபுரத்தில் முருகேசன் என்பவர் தோட்டத்தில் கரூர் மாவட்டம் பெரிய மஞ்சுவளியை சேர்ந்த ராமன் மகன் பொன்னுச்சாமி என்பவர்
கடந்த இரண்டு வருடங்களாக குத்தகை தோட்டம் போட்டு வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும் வீரமணி தனக்குமார் என்ற இரு மகன்களும் தங்கமணி என்ற மகளும் உள்ளார்கள் விவசாயியான பொன்னுச்சாமி இன்று தனது மாடுகளை மேய்ப்பதற்காக அழைத்துச் சென்ற பொழுது மாடு தடுமாறி
கரையில் விழுந்தது விழுந்த மாட்டை எழுப்பும்போது கரையில் இருந்த மாடு சரிந்தது இதில் பொன்னுச்சாமி நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார் மாடு கிணற்றின் பக்கவாட்டில் விழுந்தது பின்பு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது கிணற்றில் விழுந்தவர் மேலே வரவில்லை பின்பு வேடசந்தூர் தீயணைப்பு துறையினற்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு அரை மணி நேரத்துக்கு மேலாக தேடினார்கள் பின்பு இறந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
இச்சம்பவம் குறித்து கூம்பூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர் இறந்தவரின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.