காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்கவைக்கும். அதோடு, உடலுக்கு ஆரோக்கியமான செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றல் அளவுகளை வழங்குகிறது. அந்த வகையில் ப்ரோக்கோலி, வெங்காயம், குடைமிளகாய், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சமைத்து சாப்பிடுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், என்சைம்கள் அழிக்கப்பட்டு அவற்றின் ஊட்டச்சத்து குறைவதாக கூறப்படுகிறது.